Google

History

எரிச்சிக்கு தென் கிழக்கில் உள்ள வீரவனம், பொய்கைநல்லூர் என்று இலக்கியங்களின் சொல்லப்படுகின்ற அறந்தாங்கியில் அருள்பாலித்துவரும் பீரவனக்காளியாகிய வீரமாகாளி அம்மனிடம் பஞ்ச பாண்டவர்கள் சிறிது காலம் தங்கி வழிபாடு செய்ய எண்ணியபோது இல்லறத்தார் தங்க ஏற்ற இடமாக வீரவனம் இல்லை என்று தனது வலக்கையை நீட்டி இடா்பாடுகனை எரித்து எரிச்சியில் பாண்டவர்களைத் தங்கச செய்தாள். அன்னை வீரமாகாளி கை நீட்டி இடர்பாடுகனை எரித்த இடம் ஆதலால் இவ்வூர் எரிச்சி எனப் பெயர் பெற்றது. இப்பகுதி மகாபாரதத்துடன் தொடர்புடையது என்பதற்கு மயூரகிரி என்று அழைக்கப்படும் குன்றக்குடி தல வரலாறும் சான்று பகர்கின்றது.

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்"
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.
பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது.
மெலே கூறப்பட்ட சான்றுகளின் படி எரிச்சி வெள்ளாற்றிற்கு வடக்கே இருப்பதல் இந்த பகுதி வடகோனாடு என்று அழைக்கபட்டது. இதன் மூலம் தற்போதைய எரிச்சியே பண்டைய கோனாட்டு எறிச்சலூர் என்பது உறுதிப்படுத்தபடுகிறது.